பல்லவர்கள் தொன்மையியல் வரலாறு

Save 13%

Author: கேப்ரியே ஜீவோ துப்ரே தமிழில் வானதி

Pages: 136

Year: 2023

Price:
Sale priceRs. 140.00 Regular priceRs. 160.00

Description

பல்லவ வம்சத்தைச் சேர்ந்த ஆரம்பகால மன்னர்கள் குறித்து யாரேனும் எழுதியிருக்கிறார்களா? குறிப்பாக, அவர்கள் காலத்தில் கலை எவ்வாறு செழித்தது என்பதை யாரேனும் ஆராய்ந்திருக்கிறார்களா? அத்தகைய நூல்கள் தென்படாததால் தானே ஆராயத் தொடங்கி, ஒரு நூலையும் எழுதி முடித்தார் பிரெஞ்சுத் தொல்லியலாளர் கேப்ரியே ஜுவோ துப்ரே (1885-1945).

கைலாசநாதர் கோயில் பிச்சாடனர் சிற்பம், மகிஷாசுரமர்த்தினி புடைப்புச் சிற்பம், குடைவரைகள் என்று பல்லவர்கள் நிகழ்த்திக் காட்டிய சாதனைகள் அசாதாரணமானவை. இந்தியக் கலை வரலாற்றில் பல்லவர் காலத்தில்தான் அழகுணர்ச்சி கலை உச்சதைத் தொட்டது என்று சொல்லலாம்

ராஜசிம்மன், மகேந்திரன், நந்திவர்மன் ஆகியோரின் சகாப்தங்களை விவரிப்பதோடு பல்லவர் காலத் தொன்மச் சின்னங்களைச் சீராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்நூல். பல்லவர் வரலாற்றிலும் கலையிலும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் ஓர் அருமையான தொடக்கப்புள்ளியாக அமையும். படங்கள், கல்வெட்டுகள், விளக்கக்குறிப்புகள் அனைத்தும் உள்ளன.

You may also like

Recently viewed