Description
ஒரு பெண்ணாகப்பட்டவள் அடிமையாவதோ. தானே அடிமையாக்கப்படுவதென்பதோ மனித குலத்திற்கே இழைக்கப்பட்ட தீங்காகும். ஆரம்ப காலகட்டத்தில் காந்தியேகூட கஸ்தூரிபாவை, தான் சொல்வதைக் கேட்கக்கூடிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், கஸ்தூர்பா அதை மறுத்துத் தன் சுயமரியாதையை எங்கேயுமே விட்டுக் கொடுத்ததே இல்லை.
- டாக்டர் ம. பிரேமா அண்ணாமலை காந்தி கல்வி நிலையம், சென்னை
காந்தியடிகளே கூறியதுபோல அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறது. அப்படி வெளிப்படையாக வாழ்ந்த ஒரு வாழ்க்கை காந்தியடிகளின் வாழ்க்கை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், அவருடன் இணைந்து வாழ்ந்த கஸ்தூர்பா அவர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கான பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. அந்தக் குறையை போக்கும் வண்ணம் தமிழில் கஸ்தூர்பாவை பற்றி நூல்கள் வெளிவருவது மிகவும் நன்று.
அ. அண்ணாமலை இயக்குனர், தேசிய காந்தி அருங்காட்சியகம், புதுடெல்லி
நான் ஆரம்பத்திலிருந்தே, 'ஆண்களின் சாதனைக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள்' என்பதற்கு பதிலாக, 'இணையாக உடன் இருப்பாள், பின்னால் அல்ல' என்ற சமத்துவமான பார்வையைக் கொண்டிருக்கிறேன். இந்த என்னுடைய எதிர்க்கருத்தின் குறியீடாக, பல பெண்களின் வாழ்க்கை, என்னுடைய எண்ணங்களின் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக வளர்ந்திருக்கிறது. இது போன்றவர்களின் வரிசையில் முதன்மையானவர்களில் ஒருவராக கஸ்தூர்பா அவர்கள் என் ஆழ்மனதை கிளறி விட்டிருக்கிறார்.
பரகூர் ராமச்சந்திரப்பா (நூலாசிரியர்)