மேன்மை கொள்

Save 11%

Author: சோம.வள்ளியப்பன்

Pages: 168

Year: 2023

Price:
Sale priceRs. 170.00 Regular priceRs. 190.00

Description

உலகின் முக்கிய மனிதர்கள், உலகுக்கு கணிசமான பங்களிப்புச் செய்தவர்களின் பெயர்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு பட்டியல் போடுகிறீர்களா? நல்லது... திருவள்ளுவர், கம்பர், காந்தி, நேரு, ராஜராஜ சோழன், நெப்போலியன், நியூட்டன், ஐன்ஸ்டீன், ஷேக்ஸ்பியர், பீத்தோவன், மொசார்ட் என்று மனதுக்குள் பெயர்கள் ஓடுகின்றனவா? இப்போது உங்களிடம் ஒரு கேள்வி: உங்கள் பெயர் அதில் வருமா? அவர்கள் செய்தது போல ஏதாவது பெரும் பங்களிப்பு, சாதனை நீங்கள் செய்வீர்களா? மற்ற எந்த மனிதரையும் போலத்தானே நாமும்? சிந்திக்கும் ஆற்றல், மன உறுதி, மற்றும் உடல் வலிமை ஆகியவற்றில் வேறுபாடு இல்லையே! அப்படிப்பட்ட ஒரு பட்டியலில் உங்கள் பெயர் பொறிக்கப்பட, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நமக்கு, நம் பெற்றோருக்கு, நாம் படித்த கல்வி நிலையங்களுக்கு, பணி செய்யும் நிறுவனத்துக்கு, தாய்நாட்டுக்கு, இனத்துக்குப் புகழ் சேர்க்கும்விதமாக, ஏதாவது பங்களிப்பு செய்யவேண்டாமா? நம் வல்லமையை அப்படிச் சாதனையாகக் காட்டவேண்டாமா? லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு, தன்னுடைய ஒளிவீசும் கதிர்களைப் பிரபஞ்சத்தில் பாய்ச்சியபடி பிரகாசிக்கும் சூரியனைப் போல, நாம் எங்கே வாழ்ந்தாலும், நாம் இருக்கும் இடத்திலிருந்து எட்டுத் திசைகளுக்கும் நம் சாதனை புகழ் பரவும் வண்ணம் செயல்படவேண்டாமா? இந்தப் புத்தகம் உங்களை அப்படியான சாதனையை நோக்கி முதல் காலடியை எடுத்துவைக்கத் தூண்டும்.

You may also like

Recently viewed