விக்கிரமாதித்தன் கதைகள்

Save 9%

Author: உமா சம்பத்

Pages: 0

Year: 2023

Price:
Sale priceRs. 200.00 Regular priceRs. 220.00

Description

காலத்தை வென்று நிற்கும் பொக்கிஷம். சொக்க வைக்கும், சிந்திக்க வைக்கும் கற்கண்டுக் கதைகள். விக்கிரமாதித்தன் மட்டுமல்ல, நாம் அனைவருமே வேதாளத்திடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள். ‘விடை தெரிந்தும் நீ கூறாவிட்டால், உனது தலை வெடித்துச் சுக்குநூறாகிப் போகும்’ என்னும் வேதாளத்தின் அதட்டலையும் உருட்டலையும் யாரால் மறக்கமுடியும்? எவ்வளவு பெரிய புதிராக இருந்தாலும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் ஒவ்வொருமுறையும் பதிலளிக்கும் விக்கிரமாதித்தனை யாரால் வியக்காமல் இருக்கமுடியும்?

இந்தியத் தொன்மம் என்பது ஒரு புதையல் என்றால் அதிலுள்ள மினுமினுக்கும் மரகதக் கற்கள் என்று விக்கிரமாதித்தன் கதைகளைச் சொல்லலாம். சமஸ்கிருதம் தொடங்கி இந்திய மொழிகள் பலவற்றில் பல வடிவங்களில் இக்கதைகள் உயிர்த்திருக்கின்றன. விக்கிரமாதித்தனையும் வேதாளத்தையும் யார் உருவாக்கினார்கள் என்பது தெரியவில்லை. இக்கதைகள் எப்போது, எப்படித் தோன்றியிருக்கும் என்றும் சொல்லமுடியவில்லை. உனக்கு எப்படி இவ்வளவு கதைகள் தெரியும்? விக்கிரமாதித்தனுக்கே சவால் விடும் வலிமையை எப்படிப் பெற்றாய் என்று வேதாளத்திடம் கேட்டால், ‘வேறு எப்படி? எல்லோரையும்போல் நானும் கதைகள் கேட்டுத்தான் வளர்ந்தேன்’ என்று கடகடவென்று சிரிக்கிறது வேதாளம்.

வேதாளம் சொன்ன பழம்பெரும் கதைகளை இன்றைய நவீனக் காலத்துக்கு ஏற்றாற்போல் புதுமையான மொழியில், சொக்க வைக்கும் நடையில் வழங்கியிருக்கிறார் உமா சம்பத்.

You may also like

Recently viewed