Description
ஆச்சரியமூட்டும் ஆளுமைகள். மறக்கக்கூடாத நிகழ்வுகள். திகைக்க வைக்கும் நிஜக் கதைகள். இந்த நூல் சிறிய, சுவாரசியமான வரலாற்று என்சைக்ளோபீடியா.
அள்ள அள்ளக் குறையாத செல்வத்தையும் கேட்கக் கேட்கத் திகட்டாத கதைகளையும் கற்கக் கற்கத் தீராத பாடங்களையும் கொண்டிருக்கும் ஒரு துறை, வரலாறு.
ஜோன் ஏன் எரித்துக்கொல்லப்பட்டார்? மனிதர்களை இணைக்கவும் மேம்படுத்தவும் வந்த மதம் ஏன் மோதல்களை வளர்த்துவிடுகிறது? கத்தியின்றி, ரத்தமின்றி ஜெருசலத்தை சலாஹுத்தீன் வென்றது எப்படி? கிளியோபாட்ராவின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? பெர்னார்ட் ஷாவை ஏன் ஜீனியஸ் என்கிறோம்? பாபரிடமிருந்து நாம் என்ன கற்கலாம்? ஒருவர் ஒரே நேரத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இருக்கமுடியுமா? அம்பேத்கர் தெரியும், அமெரிக்க அம்பேத்கர் தெரியுமா?
நாகூர் ரூமியின் இந்நூல் வரலாற்றுப் பலாப்பழத்தில் இருந்து இனிப்பான சுளைகளை மட்டும் தேடியெடுத்து நமக்கு அளிக்கிறது. வரலாற்றிலிருந்து கற்க விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.