இயற்கையின் மரணம்

Save 11%

Author: ரகு ராமன்

Pages: 192

Year: 2023

Price:
Sale priceRs. 205.00 Regular priceRs. 230.00

Description

பருவநிலை மாற்றம் என்பது எங்கோ தொலைவில் நடைபெறும் முக்கியமற்ற நிகழ்வல்ல. அது நம் அருகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவரையும் பாதித்துக்கொண்டிருக்கிறது. அச்சுறுத்துவது அல்ல, புரிதலையும் நம்பிக்கையையும் வளர்த்தெடுப்பதே இந்நூலின் முதன்மையான நோக்கம்.

பொதுவாக வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகவியல் உள்ளிட்ட கோணங்கள் சார்ந்துதான் விளக்கப்படுகின்றன,ஆராயப்படுகின்றன. சூழலியல் நீண்டகாலமாகக் கவனம் பெறாமலேயே இருந்துவிட்டது. வரலாற்றை மட்டுமல்ல, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் முக்கியச் சக்திகளுள் ஒன்று இயற்கை என்னும் புரிதல் ஏற்பட்ட பிறகு வரலாற்றை நாம் அணுகும் போக்கு தலைகீழாக மாறியிருக்கிறது.

உலகம் முழுக்கப் பேரரசுகள் எவ்வாறு தோன்றின, எவ்வாறு பலம் பெற்றன, எவ்வாறு வீழ்ச்சியைச் சந்தித்தன என்பதைச் சூழலியலை விலக்கிவிட்டு இனியும் ஒருவராலும் விளக்கிவிடமுடியாது. எடுத்துக்காட்டுக்கு, செங்கிஸ்கானால் உலகை வெல்லவும் அச்சுறுத்தவும் முடிந்ததற்குப் பின்னால் அப்போது நிலவிய அசாதாரண வறட்சியும் அதன் காரணமாக எழுந்த மக்களின் கொந்தளிப்பும் இருந்ததை வானிலைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இயற்கையின் கதையும் நம் வாழ்வின் கதையும் ஒன்றுதான். ரகு ராமனின் இந்நூல் பருவநிலையின் வரலாற்றை விரிந்த அளவில் முறையாக அறிமுகப்படுத்துகிறது. அறிவியல், வரலாறு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்குப் புதிய திறப்புகளை அளிக்கக்கூடிய நூல்.

You may also like

Recently viewed