இந்திய மக்களாகிய நாம்


Author: வாஞ்சிநாதன் சித்ரா

Pages: 256

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

பிறர் தொடுவதற்குப் பயப்படும் புத்தகங்களை வாசித்து, பிறர் பேசப் பயப்படும் புத்தகத்தை எழுதி இருக்கிறார் வாஞ்சிநாதன். மிகக் கடினமான, விரிவான, பரந்து விரிந்த வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்லிச் செல்கிறார்.

-ப.திருமாவேலன்

இந்தியா, உலகின் மிகப்பெரிய குடியரசு. கூட்டாட்சித் தத்துவத்தின் வாழும் எடுத்துக்காட்டு. உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்புச் சட்டம் நம்முடையதுதான். இப்படிப் பல பெருமைகளைக் கொண்டுள்ளோம். ஆனால் இந்த அரசியலமைப்பின் உருவாக்கத்திற்குப் பின்னால் இருக்கும் இருண்ட பக்கம் நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

இந்து என்கிற ஒற்றை அடையாளம் எப்படி வளர்த்தெடுக்கப்பட்டது? அதற்கு இஸ்லாமிய வெறுப்பு எவ்வாறு உதவியது? இந்தியப் பிரிவினை எப்படி ஏற்பட்டது? மாநிலங்கள் தங்களுடைய அதிகாரத்தை எப்படி, ஏன் இழந்தன? சுதந்தரத்துக்கு முந்தைய பிரச்னைகள் சமகால அரசியலில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன? இன்னும் பல கேள்விகளை எழுப்பி பல முக்கியமான விவாதங்களை இந்நூலில் தொடங்கியிருக்கிறார் வாஞ்சிநாதன் சித்ரா.

இந்திய அரசியல் வரலாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு இரண்டிலும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய, விவாதிக்கவேண்டிய நூல்.

You may also like

Recently viewed