Description
காடு என்றதும் ஒருவிதப் பரவசம் நம்மைப் பற்றிக்கொள்கிறது. அது எப்படி இருக்கும்? அங்கே என்னவெல்லாம் நிறைந்திருக்கும்? அங்கே சில தினங்கள், குறைந்தது சில மணி நேரம் கழிப்பது சாத்தியமா? ஒரு பக்கம் குறுகுறுப்பு பெருகும்போதே இன்னொரு பக்கம் அச்சமும் படரத் தொடங்கிவிடுகிறது. ஒருவேளை புலி வந்தால் என்ன செய்வது? பாம்பு வந்தால் என்னாகும்? இருளில் மாட்டிக்கொண்டால் என்னாவது? காடு அழகானதா, ஆபத்தானதா? காடு உண்மையில் எப்படி இருக்கும்? அங்கே எத்தகைய உயிர்கள் நிறைந்திருக்கின்றன? இந்த உயிர்களெல்லாம் எப்படி அங்கே வாழ்கின்றன? காடு நம்மைவிட்டு விலகியிருக்கும் ஓரிடமா அல்லது நம் வாழ்விடத்தின் ஒரு பகுதியா? சந்துருவின் இந்நூல் காட்டை முற்றிலும் புதிய கோணத்தில் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. யானை, பாம்பு, ஆந்தை, கருந்தேள், தேன்சிட்டு, வலசை பறவை, மீன்கொத்தி, காட்டெருமை, பட்டாம்பூச்சி என்று தொடங்கி வண்ணமயமான பல ஜீவராசிகளை இந்நூலில் நாம் நெருங்கிச்சென்று ஆராய்ப்போகிறோம். ‘கழுகுகளின் காடு’ நூலைத் தொடர்ந்து வனம் குறித்தும் சூழலியல் குறித்தும் சந்துரு எழுதியிருக்கும் பயனுள்ள, ரசனையான நூல்.