Description
‘ஒரு மரத்தில் பூத்து, தன் அழகைக் காட்டி, காற்றில் அசைந்து குலுங்கி, கடைசியில் அதே மரத்தடியில் விழுந்து மறைந்துவிடும் பூக்கள். பலரும் ஒருகணம்கூடப் பொருட்படுத்திப் பார்க்காத பூக்கள். அந்த மரத்துக்கு மட்டுமே உரித்தான பூக்கள்.’ எளிய மனிதர்களின் வாழ்வும் இதேபோல் பூத்துக் குலுங்கிய கையோடு மறைந்துவிடக்கூடாது என்னும் அக்கறையோடு அவர்களைப் பற்றிய தன் நினைவுகளை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் பாவண்ணன்.
எம்.ஜி.ஆரை வேடிக்கை பார்க்க குதூகலத்தோடு காத்திருக்கும் குழந்தைகள், மனிதர்கள்மீது நம்பிக்கை இழந்து காட்டுக்குள் சென்று வனவாசம் செய்யும் பெரியவர், லாட்டரி சீட்டு கனவில் மூழ்கி வாழ்வைத் தொலைக்கும் அப்பாவி மனிதர்கள், கடவுள் வேஷம் கட்டி ஆடும் வாத்தியாரின் வதை, அய்யனார் சிலை செய்யும் பெரியப்பா, வயல் வேலை பார்த்துக்கொண்டே அடுக்கடுக்காக விடுகதை போடும் அக்கா, அக்கறையும் அன்பும் கொண்ட அபூர்வமான பள்ளிக்கூட ஆசிரியர்கள் என்று பாவண்ணன் அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் நம் மனதுக்கு நெருக்கமான உறவுகளாக மாறிவிடுகிறார்கள். பாவண்ணனின் சுயசரிதையின் ஒரு பாகமாகவும் இந்த நூலைக் கருதமுடியும்.