Description
வரலாறு என்பது ஒரு வகை கற்பனை. கற்பனை எப்போது வேண்டுமானாலும் வரலாறாக மாறலாம். வரலாறு மட்டுமல்ல, தொன்மம், சமயம், கலை, இலக்கியம், அரசியல், தத்துவம் என்று அனைத்தும் கற்பனையோடு தொடர்ந்து உரையாடி வருகின்றன. உரையாடலின்மூலம் தொடர்ந்து செழிப்புற்று வருகின்றன. சல்மான் ருஷ்டி, எட்வர்ட் செய்த், ஓரான் பாமுக், காஃப்கா, கலீலியோ, இயேசு கிறிஸ்து, காந்தி அனைவரும்  இந்நூலில் ஒன்று கலந்திருக்கின்றனர். நிஜமும் நிழலும், உண்மையும் புனைவும், இருளும் ஒளியும், வாழ்வும் கனவும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. இலக்கியத்துக்கும் வரலாறுக்கும் இடையில் அமைந்திருக்கும் எண்ணற்ற கதவுகளில் சிலவற்றை மருதனின் இந்நூல் பேரார்வத்தோடு திறந்து பார்த்து ஆராய்கிறது.
                          
