தோழர்கள் பாகம்-2


Author: கி.ரமேஷ்

Pages: 160

Year: 2023

Price:
Sale priceRs. 190.00

Description

‘இந்நூல் இன்றைய இளைய தலைமுறையைச் சென்றடைய வேண்டும்.’

- ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

கம்யூனிசம் என்றால் என்ன? நம் உலகையும் நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் அது எவ்வாறு அணுகுகிறது? கம்யூனிஸ்டுகள் யார்? பிற கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து அவர்கள் எவ்வாறு மாறுபடுகின்றனர்? தங்கள் வாழ்க்கைமுறையையும் நெறியையும் அவர்கள் எவ்வாறு வகுத்துக்கொள்கின்றனர்? உழைக்கும் மக்களின் வாழ்வில் அவர்கள் செலுத்திய, செலுத்திவரும் தாக்கம் எத்தகையது?

இந்தக் கேள்விகள் முன்பைவிடவும் இன்று தீவிரமும் கூர்மையும் அடைந்துள்ள நிலையில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதாகும். கோட்பாடுகளின்மூலம் விளக்குவது ஒரு வகை என்றால் அக்கோட்பாட்டை ஏற்று நடைமுறையில் பின்பற்றிவரும் தோழர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் கம்யூனிசத்தை விளக்குவது இன்னொரு வகை. இந்நூல் இதைத்தான் செய்கிறது.

சுந்தரய்யா, லஷ்மி செகால், பாப்பா உமாநாத், அகில்யா ரங்னேகர், ஏ.கே.கோபாலன், பி.டி.ரணதிவே, ஜோதிபாசு போன்ற தோழர்களின் போராட்ட வாழ்வையும் சமூக, அரசியல் பங்களிப்புகளையும் எளிமையாகவும் செறிவாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் கி. ரமேஷ். வாழ்க்கைக் குறிப்புகளோடு அவரவர் காலத்து அரசியல், சமூகப் பின்னணியையும் இணைத்து வழங்குவது இந்நூலின் சிறப்பு.

You may also like

Recently viewed