காட்டு வழிதனிலே


Author: வ.கோகுலா

Pages: 216

Year: 2023

Price:
Sale priceRs. 235.00

Description

காட்டுயிர்கள் ஓர் உலகிலும் நாம் வேறோர் உலகிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விலங்குகள் குறித்தும் பறவைகள் குறித்தும் மேலோட்டமான புரிதல் மட்டுமே நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. அக்குறையைப் போக்கி இரு உலகங்களுக்கும் இடையில் ஒரு பாலத்தை அமைக்கிறது வ. கோகுலாவின் இந்நூல்.

உயிரினங்கள் எவ்வாறு தோன்றின? எப்படி வளர்கின்றன? எப்படி வேட்டையாடுகின்றன? எப்படி மடிகின்றன? அனைத்தையும் கதைபோல விவரிக்கிறது இந்நூல். ஒவ்வோர் உயிரினத்துக்கும் உள்ள தனிச் சிறப்புகளை அழகாக எடுத்துச்சொல்வதோடு சுற்றுச்சூழலின் மேன்மைக்கு இந்த உயிர்கள் ஆற்றும் பங்களிப்புகளையும் குறிப்பிடுகிறது. மனித நாகரிக வளர்ச்சி காட்டுயிர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் கவனப்படுத்துகிறது.

மனிதக் கண்ணோட்டத்தில் அல்லாமல் உயிரினங்களே பாத்திரங்களாக வந்து தங்கள் கதைகளை நம்மோடு நேரடியாகப் பகிர்ந்துகொள்கின்றன. சிங்கம், புலி, சிறுத்தை, குரங்கு, யானை என்று நமக்கு மிகவும் பழக்கப்பட்ட விலங்குகளிலிருந்து நமக்குத் தெரியாத கான மயில், போத்து, கூழைக்கிடா, நீர்நாய், பாறு கழுகு எனப் பல வகை உயிரினங்களின் அதிசய உலகை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

வ. கோகுலா ஓர் அருமையான வழிகாட்டியாக இருந்து நம்மைக் காட்டுக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்று மூலை முடுக்குகளையெல்லாம் நிதானமாகச் சுற்றிக் காட்டுகிறார். வாருங்கள், செல்வோம்!

You may also like

Recently viewed