இப்படித்தான் உருவானேன்


Author: பழ.கருப்பையா

Pages: 336

Year: 2024

Price:
Sale priceRs. 375.00

Description

பழ. கருப்பையாவின் தமிழ்நடை மிக நன்றாக இருக்கிறது என்பது மட்டுமின்றி, சொல்ல வந்ததை வெட்டு ஒன்று, துண்டு இரண்டாகச் சொல்லி விடுவார்! யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்!

பழ. கருப்பையா மீது ஒரு சின்ன தப்புக்கூடச் சொல்ல முடியாது! அவரது கருத்துகள் சிலரால் ஏற்கப்படலாம்; சிலரால் ஏற்கப்படாமல் இருக்கலாம்! அது வேறு! ஆனால் அந்த மனிதர் நேர்மையின் மறுவடிவம். இதுபோல இருப்பவர்கள் பதவிக்கு வந்தால், அந்த அமைச்சரவையில் ஊழல் இருக்காது என்று சொல்லி விடலாம்.

சோ(துக்ளக்-10-03-2010)

தமிழன்னை பழ. கருப்பையாவின் நாவில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறாள் போலும்.

விமர்சனக் கட்டுரைகளைக் கவர்ச்சியாக எழுதுவது எப்படி?

இந்தக் கலையை ஆதிஅந்தம் கரைத்துக்குடித்த எழுத்தாளர்கள் ஒரு சிலரே. அவர்களில் ஒருவர் எனக்குத் தெரிந்தவரை அன்று கல்கி; இன்று பழ. கருப்பையா! கல்கியிடம் நகைச்சுவை இருக்கும். பழ. கருப்பையாவிடம் இலக்கிய ரசனையுடன் கூடிய நையாண்டி இருக்கும். பழ. கருப்பையா கடுகு வெடிப்பது போல் வெடித்து, நம்மை அறியாமல் கடகடவெனச் சிரிக்க வைத்துச் சிந்திக்கவும் வைத்து விடுவார்.

-கே. வைத்தியநாதன்

 

You may also like

Recently viewed