Author: கார்குழலி

Pages: 208

Year: 2023

Price:
Sale priceRs. 240.00

Description

இது நம் கதை. நம் மண்ணின், மரபின், சமூகத்தின், வரலாற்றின், பண்பாட்டின் கதை. ஆப்பிரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவிப் படர்ந்திருக்கும் மனித குலத்தின் கதை.

கிரேக்கம், ரோம், பாபிலோன், பாரசீகம், டமாஸ்கஸ் போன்ற பண்டைய நாடுகள் உயிர்பெற்று எழுகின்றன. சீனப் பெருஞ்சுவர், பிரமிடு, நைல் நதிக்கரை, அங்கோர் வாட், பாமியன் புத்தர் சிலைகள், வாடிகன் நகரம், ஆஸ்திரேலியா பவளத்திட்டு, கலாபகஸ் தீவுகள் என்று தொடங்கி உலகம் தழுவிய அளவில் ஒரு மாபெரும் பயணத்தைத் தொடங்கவிருக்கிறோம். வழிபாட்டிடம், நூலகம், விளையாட்டரங்கம், மாளிகை, கோபுரம், வர்த்தகத் தடம் என்று சுற்றித் திரியப்போகிறோம். கடவுள்களும் தேவதைகளும் மன்னர்களும் கொடுங்கோலர்களும் நம்மை வரவேற்கக் காத்திருக்கின்றனர். கலை, இலக்கியம், அறிவியல், கட்டடவியல் என்று பல துறைகள் ஒன்று கலக்கின்றன.

யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களின் வாயிலாக உலகின் கதையை விரிவான தரவுகளோடு சுவையாக விவரித்துள்ளார் கார்குழலி. பன்முகத்தன்மையே நாம் பெருமிதம் கொள்ளும் ஒரே அடையாளம் என்பதை அழுத்தமாக உணர்த்தும் ஒரு நூலாகவும் இது திகழ்கிறது.

You may also like

Recently viewed