உலகக் குடிமகன்

Save 8%

Author: நா.கண்ணன்

Pages: 200

Year: 2023

Price:
Sale priceRs. 220.00 Regular priceRs. 240.00

Description

கல்வி என்னவெல்லாம் செய்யும்? ஒரு சாமானியனைப் பல சாதனைகள் படைக்கச் செய்யும். பல நாடுகள் பயணிக்க வைக்கும். ஊர் மட்டுமே தெரிந்த ஒருவனை உலகக் குடிமகனாக்கும். அதற்கான நேரடி சாட்சியம்தான் இந்த நூல்.

திருப்பூவணம் எனும் கிராமத்தில் பிறந்து, கல்வியை வழிகாட்டியாகக் கொண்டு ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, இத்தாலி, எகிப்து, கனடா, கொரியா, சீனா, அமெரிக்கா என உலக வரைபடத்தில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் பயணித்து, தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த நா. கண்ணன் எனும் பேராசிரியரின் வாழ்க்கை வரலாறு நம்மைப் பரவசப்படுத்துவதோடு உத்வேகமும் கொள்ளச் செய்கிறது.

நா. கண்ணன் சூழல் வேதியியல், சூழல் நச்சுவியல் எனும் துறைகளில் உலகின் ஆகச்சிறந்த முதல் பத்துப் பேராசிரியர்களுள் ஒருவர். உலகளவில் நோபல் நாயகர்களின் தரத்தில் வைத்துக் கொண்டாடப்படுபவர்.

இது வெறும் சுயசரிதை மட்டுமல்ல. உலக நாடுகள் ஏன் இந்தியாவைவிட கல்வி அறிவில், மனித வளத்தில் முன்னிலையில் இருக்கின்றன; இந்தியர்கள் சறுக்கும் இடங்கள் என்னென்ன, சரிப்படுத்தவேண்டிய விஷயங்கள் யாவை என்பதை நுணுக்கமாக விவரிக்கும் நூலும்கூட.

வாழ்க்கையில் வெற்றிபெற விரும்புபவர்கள், உலகை அறிந்துகொள்ள விரும்புபவர்கள், மாணவர்கள் என ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

You may also like

Recently viewed