ஒரு ஜோடி பட்டுக் காலுறை


Author: தமிழில் கார்குழலி

Pages: 184

Year: 2023

Price:
Sale priceRs. 200.00

Description

உலகம் முழுவதும் உள்ள 11 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு பண்பாட்டுச் சூழல்களில், வெவ்வேறு வாழ்க்கைமுறைகளைக் கைக்கொள்ளும் பெண்களின் கதைகளைப் பேசும் நூல் இது. இப்பெண்கள் எதிர்கொள்ளும் சமூக யதார்த்தங்களையும் முரண்களையும் உளவியல் சவால்களையும் காணும்போது இவையெல்லாம் வேற்றுக் கதைகளாக அல்லாமல் நம் கதைகளாக மாறுவதைக் காணமுடிகிறது. அந்த மாற்றமே இக்கதைகளை ஒரு புள்ளியில் ஒன்று குவித்து வேறொரு தளத்துக்கு உயர்த்துகின்றன. .

பெண்கள் சமூக அமைப்பில் தங்களைப் பொருத்திக்கொள்ள முயலும்போது அல்லது முரண்படும்போது மேலெழும் உணர்வுகளை நுட்பமாக இக்கதைகள் விவாதிப்பதைக் காணலாம். வலி, வேதனை, ஏக்கம், ஏமாற்றம், கொந்தளிப்பு, கோபம் மகிழ்ச்சி, நட்பு, நம்பிக்கை, கனவு, மாயாஜாலம் அனைத்தும் ஒன்று கலந்து உந்தித் தள்ள அறிவிக்கப்படாத பெரும் போரொன்றை ஒவ்வொரு பெண்ணும் பிரகடனம் செய்கிறார். நாம் உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகள், கற்பிதங்கள், புனிதங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் அப்போரில் மடிந்து விழுகின்றன.

You may also like

Recently viewed