Description
ஒரு எழுத்தாளராகத் தனது புத்தகக் கண்காட்சி அனுபவங்களை சோம.வள்ளியப்பன் தனது வாசகர்களோடு நேரடியாக இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். இப்படியொரு தனித்துவமான அனுபவத்தொகுப்பு இதுவரை தமிழில் வெளிவந்திருக்கிறதா என்று தெரியவில்லை.
எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைக்கும் ஒரு முக்கியக் களம், புத்தகக் கண்காட்சி. அதிலும் சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் ஒரு முக்கியமான அத்தியாயம். பொருளாதாரம், நிதி மேலாண்மை, சுயமுன்னேற்றம், இலக்கியம் என்று பல தளங்களில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பன் புத்தகக் கண்காட்சியில் தான் சந்தித்த பலவிதமான வாசகர்களையும் எழுத்தாளர்களையும் இந்நூலில் நினைவுகூர்ந்திருக்கிறார்.
ஒரு புத்தகம் எவ்வாறு வரவேற்கப்படுகிறது, எப்படி வாசிக்கப்படுகிறது, அதிலிருந்து வாசகர்கள் என்ன திரட்டிக்கொள்கிறார்கள், தனது வாசகர்களிடமிருந்து ஒரு எழுத்தாளர் என்ன பெற்றுக்கொள்கிறார் அனைத்தையும் இந்நூலில் சுவையாக விவரிக்கிறார் வள்ளியப்பன். ஒரு படைப்பாளராகத் தனது துறை சார்ந்து அவர் எழுதியிருக்கும் சுவாரஸ்யமான அனுபவப் பகிர்வு இது.
வாசிப்பிலும் எழுத்திலும் அக்கறை கொண்டிருக்கும் அனைவரையும் இந்நூல் ஈர்க்கும்.