Description
சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் 20.9.1924 இல் 'தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் வீக்லி' இதழில் சிந்துவெளி கண்டுபிடிப்பை அறிவித்து, இன்று நூறு ஆண்டுகள் ஆகின்றன. அதை நாம் கொண்டாட வேண்டும். சங்க இலக்கியம். சிந்துவெளிப் பண்பாடு, கீழடி ஆகிய மூன்றும் இணைந்து ஒரு நேர்க்கோட்டில் செல்வதாக நான் நினைக்கிறேன். எனவே தான் 'சங்க இலக்கியம் என்பது இன்னமும் முழுவதுமாக தோண்டப்படாத கீழடி: கீழடி என்பது முழுமையாக வாசிக்கப்படாத சங்க இலக்கியம்'. சங்க இலக்கியம் சிந்துவெளிப் பண்பாடு ஆகிய வற்றுக்கு இடையேயான தொடர்பு எனும்போது சிந்துவெளி ஒரு வன்பொருள் என்றால் சங்க இலக்கியம் அதைப் புரிந்துகொள்ள உதவும் ஒரே மென்பொருள். சிந்துவெளியைப் புரிந்துகொள்ள உதவும் திறவுகோல் சங்க இலக்கியம்தான் என்று ஆணித்தரமாகக் கூற முடியும். -ஆர்.பாலகிருஷ்ணன்