Description
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிராமத்தில், ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த சாமானியர்தான் K. அண்ணாமலை. கல்லூரி வாசனை அறியாத குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் பொறியாளர் படிப்பையும், லக்னோ ஐ.ஐ.எம்.,ல் மேலாண்மை படிப்பையும், இந்திய குடிமைப் பணியில் ஐ.பி. எஸ்., ஸாக தேர்வான போது வியந்தது அவர் கிராமம்.
பின், கர்நாடக மாநிலத்தில் சிமோகா, கார்கலா, உடுப்பி, சிக்மகளூரு உள்ளிட்ட பல பகுதிகளில், மாவட்ட தலைமை காவல் அதிகாரியாகவும், பின் பெங்களூரு துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
காவல்துறை பணியில் இருந்த போதும், அண்ணாமலையின் உள்ளம் மட்டும் மக்கள் தொண்டில் முழு ஈடுபாடு கொண்டிருந்தது. அரசு பணியை செப்டம்பர் 2019 ராஜினாமா செய்த அவர், நேரடியாக சமுதாயத் தொண்டில் களமிறங்கினார்.