Description
நாகூர் ரூமி சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி எழுத்துலகில் கோலோச்சி வருகிறார். நாகூர் அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின்
வனப்பு மிகு வார்ப்புகளில் இவரும் ஒருவர்.இறை நேசர்களின் பிரார்த்தனைகளால் எழுத்துலகில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.
ஆங்கிலம் தமிழ் இரு இலக்கியங்களிலும் அதீத புலமைப் பெற்றவர். இலக்கியம் ஆன்மிகம் இரு படகுகளிலும்
பயணிக்கும் மிகச்சிலரில் ஒருவர்.வரண்டு போய்க்கிடக்கும் சூஃபிச நிலத்தில் தன் திரண்ட ஞானத்தால் நீர் பாய்ச்சி வருகிறார்.
அதன் நீட்சியே இந்நூலும்...