Description
என் தாய்நாடு என் மலைநாடு
உலகப் புகழ்பெற்ற ‘ஆவார்’ மொழிக் கவிஞர் ரசூல் கம்சதோவ் முதன் முதலாக ஓர் இதழுக்கு எழுதிய உரைநடை நெடுந்தொடரே இந்நூல். மலைநாடு எனும் பொருளைத் தலைப்பாகக்கொண்ட, ஆனால் உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராயினும் 1950கள் வரை சிற்றூர்களில் பிறந்த, அதிலும் மலையும் மலைசார்ந்த குறிஞ்சி நிலத்தில் பிறந்த எவரும் இந்த நூலில் தன்னையும் தன் உற்றாரையும் சுற்றத்தாரையும் காணவியலும்.
ஒவ்வொரு மனிதரும் தம் தேசிய இனத்தையும் அதன் பண்பாட்டையும் உயிரையும் விட மேலாக நேசிக்க வேண்டும் என்பதையும் அத்துடன் சர்வதேசியத்தையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது.