Description
இந்நூலாசிரியர் பேராசிரியர் இரா. முரளி மதுரைக் கல்லூரியில் தத்து வத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிந்து, அதே கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாக்ரடீஸ் ஸ்டூடியோ எனும் யூ ட்யூப் சேனலில் தத்துவம் குறித்து காணொளிகளை வழங்கி வருகிறார். ஹேபர்மாஸ், தியோடர் அடர்னோ, தேவி பிரசாத் சட்டோப் பாத்தியா ஆகிய தத்துவ ஞானிகள் குறித்த நூல்களை தமிழில் எழுதியுள்ளார் அகில இந்திய அளவில் பல தத்துவ கருத்தரங்குகளில் பங்கு பெற்றவர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அகில இந்தியப் பொறுப்பாளராகவும் இருக்கின்றார். தமிழ்நாட்டில் மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கின்றார்