Description
என்னுடைய நான்காவது
வயதிலிருந்துதான் என் ஞாபகம்
தொடங்குகிறது. அது மயிலாப்பூர்
கபாலி சந்நிதித் தெருவில் நாங்கள்
குடியிருந்ததிலிருந்துதான் தொடங்கு
கிறது. ஆனால், உடனேயே நாங்கள்
குரோம்பேட்டைக்குச் சென்று
விட்டோம். ஆறாம் வகுப்பு வரை அங்குதான்
இருந்தேன். எனவே பிள்ளைப் பருவத்தின் பெரும்பகுதி
அங்குதான் கழிந்தது.
அப்போது நடந்தனவற்றை, இப்போது நினைத்துப்
பார்ப்பதுதான் 'குரோம்பேட்டை ஞாபகங்கள்” என்னும்
இந்தச் சிறு கட்டுரை நூல். உங்களுடைய பிள்ளைப்
பருவத்தை உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களை
மகிழ்ச்சிப்படுத்த வேண்டும், சற்றே உறுத்த வேண்டும்
என்பதுதான் இதை வெளியிடுவதன் நோக்கம்!
- இசைக்கவி ரமணன்