Description
வரலாற்று நிகழ்வுகள் பெரிய நகரங்களை மையப்படுத்தியே நடப்பதாக ஒரு தோற்றம் உண்டு. உண்மையில் சிறிய ஊர்களும் பல வரலாற்று எச்சங்களைச் சுமந்துள்ளன. அந்த வகையில் இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஐயம்பேட்டை எனும் சிற்றூருடன் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என விவரித்திருக்கிறார் ஆசிரியர்.
சோழர் காலத்தில் தொடங்கி, நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர் கால முக்கிய நிகழ்வுகள் இவ்வூரை மையப்படுத்தி நிகழ்ந்துள்ளன.
- மாறவர்மன் சுந்தரபாண்டியன் படையெடுப்பு சோழர் ஆட்சியை ஒழித்து தமிழகத்தின் தலைவிதியை எவ்வாறு மாற்றியது?
- கஜினி முகமதுவின் படையெடுப்புக்குப் பிறகு குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சௌராஷ்டிர மக்களின் நிலை என்ன ஆனது?
- ஜாதிய படிநிலையில் ராமானுஜர் நிகழ்த்திய புரட்சி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தின?
- மகாத்மா காந்தி தொடங்கி வைத்த உப்பு சத்தியாகிரகம் தமிழகத்தில் எவ்விதத்தில் முன்னெடுக்கப்-பட்டது?
இப்படிப் பல வரலாற்றுக் கேள்விகளுக்கான விடைகள் ஐயம்பேட்டை எனும் ஊரின் வரலாற்றில் மறைந்துள்ளன. அவற்றை கல்வெட்டு, இலக்கியம் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் வழி விவரிக்கிறார் ஆசிரியார்.