உணர்வால் முடியும்: இட்லியாக இருங்கள் 4/Unarvaal Mudiyum - Idlyaga Irungal 4


Author: சோம. வள்ளியப்பன்

Pages: 240

Year: 2024

Price:
Sale priceRs. 270.00

Description

வாழ்வில் வெற்றிபெற எது அவசியம்? உங்களுக்குப் பல திறமைகள் இருக்கலாம். நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆனால் வெற்றி, நிம்மதி, மகிழ்ச்சி ஆகிய வற்றை அடைவதற்குத் திறமையும் அறிவும் மட்டும் போதாது என்கின்றனர் அறிஞர்கள். தொழிலில் வெற்றிகளைக் குவித்த பலர், சொந்த வாழ்க்கையில் சோதனைகளை அனுபவிப்பதை அறிந்திருப்பீர்கள். செல்வங்களைக் குவித்த பணக்காரர்கள் நிம்மதியில்லாமல் சுற்றித் திரிவதைப் பார்த்திருப்பீர்கள். திறமை, பணம், புகழ் என எல்லாம் இருந்தும் அவர்களின் நிம்மதியற்ற வாழ்வுக்குக் காரணம் என்ன? உணர்வுகளைக் கையாளும் திறன் இல்லாதது. உணர்வுகள் நமக்குள் இருக்கும் மிகப்பெரிய சக்தி. அதனைப் பயன்படுத்தி நாம் வாழ்வை எப்படி மேம்படுத்துவது எனச் சொல்கிறது இந்தப் புத்தகம். நம் உணர்வுகள் எத்தகையது, அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எப்போது கட்டுப்படுத்த வேண்டும் எனப் பல உளவியல் விஷயங்களை எளிய உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சுருக்கமாகச் சொன்னால், உணர்வைக் கொண்டு உலகை வெல்லும் உத்தியைச் சொல்லித் தருகிறார்.

You may also like

Recently viewed