Vyasa Bharatham (5 Volumes)/வியாச பாரதம் (5 பாகங்கள்)

Save 20%

Author: ஆர்.வி.எஸ்

Pages: 3000

Year: 2024

Price:
Sale priceRs. 4,000.00 Regular priceRs. 5,000.00

Description

பாரத தேசத்தின் இதிஹாசங்களான ராமாயணம், மஹாபாரதம் இரண்டினுள், பாரதத்தைக் காட்டிலும் ராமாயணத்திற்கே ரசிகர்கள் அதிகம். இதற்கான காரணங்கள் பல; எனினும், இதிஹாச காவியத்தின் நீளத்தையும், ஆங்காங்கே காணப்படும் கிளைக்-கதைகளையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். ராம காதையைக் காட்டிலும் பாரதக் கதை வெகு நீளமானது; சம்பவங்கள் அதிகம். இவற்றினும் மேலாக, கிளைக் கதைகள் பல ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கொண்டேயிருக்கும். பிரதானக் கதையையும் அதன் போக்கையும் நிகழ்வுகளையும் புரிந்து கொள்வதற்கு முன்னதாக, கிளைக் கதையும் அதன் கதாபாத்திரங்களும் வாசகரின் உள்ளத்தை ஆக்கிரமித்திருப்பார்கள். மேற்கூறிய காரணங்களால், பாரதக் கதையைப் படிக்கவேண்டும், பயிலவேண்டும் போன்ற ஆர்வங்கள் இருப்பினும், பலருக்கும் அது இயலாமல் போகிறது. பிரதானக் கதையையும் கிளைக் கதைகளையும் தனித்தனியாகப் பிரித்து, யார் யாரிடம் பேசினார்கள் என்பதை யாராவது புரிய வைக்கமாட்டார்களா என்னும் ஏக்கம் நிறைய வாசகர்களுக்கு உண்டு. ஆர்.வி.எஸ், இத்தகைய குறையைத் தீர்க்க முயன்றிருக்கிறார். வியாசரின் பாரதக் காவியத்தை, அதே வரிசைக் கிரமத்தில், அதே விவரங்களுடன், எளிமையாக வாசிக்கும் வகையில், உரை-நடையாக இந்நூலில் தந்திருக்கிறார். - சுதா சேஷய்யன்

You may also like

Recently viewed