Description
உலகப்புகழ் பெற்ற முஸ்லிம் ஞானி ஒருவரின் பெயர் சொல்லுங்கள் என்று ஒரு முஸ்லிம் அல்லாதவரைக் கேட்டால்கூட சட்டென்று அஜ்மீர் க்வாஜா நாயகம் என்றுதான் சொல்வார். க்வாஜா நாயகத்தின் சேவை
மதங்களைத் தாண்டியது. க்வாஜா நாயகத்தின் புகழ் கால, தேசங்களைக் கடந்தது. கிட்டத்தட்ட ஒரு கோடிப்பேரை இஸ்லாத்துக்குக் கொண்டுவந்த பெருமை க்வாஜாவுக்கு மட்டுமே உண்டு. இது மேற்கத்திய அறிஞர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.
சுல்தான்கள், சக்கரவர்த்திகள், இளவரசர்கள், இளவரசிகள், நவாபுகள், நிஜாம்கள், காந்தி, நேரு, ராஜாஜி என க்வாஜாவின் தர்காவுக்கு விஜயம் செய்யாத ஆட்சியாளர்களோ அறிஞர்களோ இல்லை என்று சொல்லிவிடலாம். ஒரு மாபெரும் மகானின் வாழ்வையும் செய்தியையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பை நாகூர் ரூமியின் இந்த நூல் வழங்குகிறது.