Description
சைக்காலஜி, ந்யூரோசயன்ஸ், கம்யூனிகேஷன் தியரி, பாடி லாங்வேஜ் என்று நிரூபிக்கப்பட்ட அறிவியல் உத்திகளை எளிமையாக அறிமுகப்படுத்தி சாதா சேல்ஸ்மெனை சூப்பர்ஸ்டார் சேல்ஸ்மென் ஆக்கும் புத்தகம்!
*
இன்றைய பிசினஸ் உலகில் பொருளை கஸ்டமரிடம் விற்பதற்குள் நாக்குத் தள்ளி வாயில் நுரை தள்ளும். போதாக் குறைக்கு கஸ்டமர்களும் சேல்ஸ்மென் பேசிக்கொண்டிருக்கும் போதே விலகிச் சென்றுவிடுவார்கள். இந்தச் சூழலில், கஸ்டமருக்கு கூஜா தூக்காமல் அவரைத் தாஜா செய்து, பொருளை விற்று, சேல்ஸில் ராஜாவாகும் வழிகளைப் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறது இந்தப் புத்தகம். கடனே என்று விற்காமல் கஸ்டமரின் சைக்காலஜி, அவர் உள்ளுணர்வு, அவர் எப்படி முடிவெடுக்கிறார், அந்த முடிவை நமக்குச் சாதகமாக்க என்ன செய்யவேண்டும், அதை எப்படிச் செய்யவேண்டும் என்று சகலத்தையும் சப்ஜாடாகச் சுவையாகச் சொல்கிறார் ஆசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. இதுவரை சாதா சேல்ஸ்மெனாக நீங்கள் பொறுத்திருந்தது போதும். இனி பொங்கி எழுந்து சூப்பர் சேல்ஸ்மென் ஆகும் வழிக்கான கூகுள் மேப்ஸ்தான் இப்புத்தகம்.