Description
எல்லோருக்கும் வெற்றிபெற விருப்பம் இருக்கும். புகழோடு திகழ ஆசை இருக்கும். மகிழ்ச்சியாக வாழ ஏக்கம் இருக்கும். ஆனால் இவையெல்லாம் கனவாகவே பலருக்கும் முடிந்துவிடுகிறது. திறமை இருந்தும் பெரும்பாலானோரால் வெற்றிபெற முடியவில்லை. சிந்தனைகள் கூர்மையாக இருந்தாலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அசாத்தியமான கனவுகள் இருந்தும் சராசரி வாழ்க்கைதான் கிடைக்கிறது. என்ன செய்தும் வாழ்வின் பாதையை, சிந்தனையின் போக்கை மாற்றமுடியவில்லை. என்ன செய்யலாம்? அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கிறது இந்தப் புத்தகம்.
சொந்த அனுபவங்கள், சிந்திக்கத் தூண்டும் குட்டிக் கதைகள், நடைமுறை உதாரணங்கள் எனப் பல்வேறு வாதங்களுடன் வெற்றிக்கான சூத்திரங்களை எளிய மொழியில் விளக்கிச் செல்கிறார் ஆசிரியர் சோம.வள்ளியப்பன். வெற்றியைத் தேடி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் கொஞ்சம் நின்று, கவனித்து, உயர்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நூல் இது.