Description
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கை நெறி வகுத்துக் காட்டிய வள்ளுவரால் வழங்கப் பெற்ற அறிவுக் கருவூலமே திருக்குறள். விஞ்ஞானம் பெருகிப் பரவி வளர்ந்திருக்கும் இந்தக் காலத்தில், நிழற்படம் சுருவியின் வாயிலாக ஒளிப்பதிவாளர்கள் அவர்கள் திறனுக்கேற்பவும் சுற்பனைக்கேற்பவும் ஓர் அழகுமிழ்ச் சோலையையோ ஓர் ஆலயத்து கோபுரத்தையோ -ஓர் ஆடற்பாவையின் சிலையையோ -பல்வேறு கோணங்களில் சித்திரித்துக் காட்டுகிற வித்தகத்தைக் கண்டு மகிழ்கிறோம்.