Description
மார்க்கெட்டிங், ப்ராண்டிங், சேல்ஸ் மற்றும் பிசினஸில் மகா உண்மைகள் போல் நம்பப்பட்டு வரும் மெகா பொய்களைத் தோலுரித்து, ‘நாட்டாமை தீர்ப்பை மாத்து’ என்று உங்கள் தொழிலை நேர்படுத்தி, சீர்படுத்தும் ப்ராசிக்யூஷன் தரப்பு வாதம் இப்புத்தகம்!
*
உலகம் தட்டை, பூமியைச் சூரியன் சுற்றுகிறது போன்றவை பொய்கள் என்று நமக்குப் புரிய ஒரு கோப்பர்னிகஸ் தேவைப்பட்டார். அதே போல் பிசினஸில் மகா உண்மைகள் என்று நீங்கள் நம்பி வரும் மெகா சைஸ் பொய்களை அடுக்கி அவைகளைக் கிடுக்கி போட்டு மடக்கிப் பிடித்து எடைக்குப் போட வந்திருக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. பொய் என்று தெரியாமல் இத்தனை நாள் தொழில் செய்தது போதும். கப்ஸா என்று தெரியாமல் அதைக் கட்டிக்கொண்டு அழுவதை நிறுத்துங்கள். டகால்டிகளை நம்பி இனியும் கேட்டு வாங்கி தூக்கு மாட்டிக்கொள்ளாதீர்கள். அறிவியல் பூர்வமான ஆய்வுகள், நவீன கண்டுபிடிப்புகள், சயண்டிஃபிக் டேட்டாவின் உதவியோடு உங்கள் தொழில் சூரியன் போல் பிரகாசித்து பூமியைச் சுற்றிவர உதவும் இப்புத்தகம்.