Description
‘அறிவாளிகள் நிறைந்திருக்கும் இந்த சட்டசபைக்கு, இந்தத் திட்டத்தில் குலத் தொழிலைக் கற்கவேண்டுமென்று கட்டாயம் எங்கும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.’ - திரு. ம.பொ.சிவஞானம்
*
‘ஸ்ரீ சி.ராஜகோபாலாச்சாரியிடம் எங்களுக்கு ஆழமான அன்பும் மரியாதையும் உண்டு. அவர் கொண்டுவந்துள்ள புதிய ஆரம்பக் கல்வித் திட்டத்தை நாங்கள் பூரணமாக ஆதரிக்கிறோம். கிராமப் பள்ளியுடன் கிராம சமுதாயத்தை இணைக்க வல்லது இந்தத் திட்டம்.’ - தென் கிழக்கு ஆசிய மெத்தாடிஸ்ட் சர்ச் தலைவர் பிஷப் பிக்கெட்
*
ஷிஃப்ட் முறை வரவேற்கப்படவேண்டியதுதான்; கைத்தொழில் கல்வியும் கட்டாயம் கற்றுத் தரவேண்டும். ஆனால் அதைப் பள்ளியிலேயே முறையான பயிற்சி பெற்ற ஆசிரியரைக் கொண்டு கற்றுத் தரவேண்டும். குழந்தைகளை கிராமக் கைத்தொழில் கலைஞர்களிடம் கற்றுக்கொள்ளும்படிச் சொல்வது சரியல்ல. - திரு. காமராஜர்
***
ராஜாஜி கொண்டுவந்த கல்வித் திட்டம் தொடர்பான அரசு ஆணை, ஸ்ரீ பருலேகர் ஆய்வுக் குழுவின் பரிந்துரை, சட்டசபையில் இந்தக் கல்வித் திட்டம் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள், அன்றைய செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த நூல் உருவாகியிருக்கிறது. ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய உண்மையான சித்திரத்தை இந்த நூல் வழங்குகிறது.