Description
உலகின் செல்வாக்குமிக்க உளவு அமைப்பாகவும் உலகின் சர்ச்சைக்குரிய உளவு அமைப்பாகவும் ஒரே சமயத்தில் திகழ்கிறது மொஸாட். ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடங்கி இன்றுவரை இந்த இயக்கத்தின் ஒவ்வோர் அசைவும் ஒரு சாராரால் வியப்போடு கொண்டாடப்படுகிறது. இன்னொரு சாராரால் கடுமையாகக் கண்டிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் நாயகனாகவும் வில்லனாகவும் இருப்பது சாத்தியமா? இஸ்ரேலின் வரலாற்றை ஆராய்ந்தால்
சாத்தியம்தான் என்பது புலப்படும்.
மொஸாட் ஏன் ஆரம்பிக்கப்பட்டது? தோற்றுவித்தவர்கள் யார்? அது எவ்வாறு இயங்குகிறது? உலகிலுள்ள பிற அமைப்புகளில் இருந்து மொஸாட் வேறுபடுவது எப்படி? ஒரு சின்னஞ்சிறிய நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் உலகின் அதி நவீன உளவு அமைப்பாக எவ்வாறு திகழ முடிகிறது? அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி உலகெங்கும் பலர் மொஸாடை வியந்தோதுவது ஏன்? மொஸாடின் செயல்பாடுகள் ஏன் எதிர்க்கப்படுகின்றன, ஏன் கண்டிக்கப்படுகின்றன?
மொஸாடின் வரலாறென்பது ஒருவகையில் இஸ்ரேலின் வரலாறும்தான். அந்த வரலாற்றை ஒரு துப்பறியும் நாவல்போல் விறுவிறுப்பான மொழியில் கட்டமைத்திருக்கிறார் நன்மாறன் திருநாவுக்கரசு. பாலஸ்தீனத்தின் விரிவான வரலாற்றைத் தொடர்ந்து வெளிவரும் இந்நூல் வரலாற்றையும் சமகால அரசியலையும் கச்சிதமாக ஒரு புள்ளியில் இணைக்கிறது.