Description
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் பத்தாவது நூல்.
செல்வந்தராவதற்கான வழி முதலீடுகள் செய்வது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பெரிய தொகை இல்லாமல் சொற்ப சம்பளம் வாங்குபவர்களால் முதலீடு செய்ய முடியுமா? அதற்கான வழிகாட்டியாக இருக்கிறது இந்த நூல். எஸ்.ஐ.பி (கு.ஐ.க) என்பது சிறுகச் சிறுக முதலீடுகள் செய்து பெரும் பணம் பண்ணும் வழி. அந்த வழிமுறையை மிக எளிதாக விவரிக்கிறது இந்த நூல்.
வருமானம் குறைவாக உள்ளவர்கள் எப்படி வருமானத்தைப் பெருக்க வேண்டும், எப்படிச் சேமிக்க வேண்டும், எதில் எல்லாம் முதலீடுகள் செய்யலாம், மாதம் நூறு ரூபாய் இருந்தால்கூட அதை எப்படி முதலாக்கி லாபம் பார்க்கலாம் போன்ற வழிமுறைகளை நிஜ உதாரணங்களோடு விளக்குகிறார் சோம. வள்ளியப்பன். ஏற்ற இறக்கங்கள், சந்தை அபாயங்கள் உள்ள பங்குச் சந்தையில் நிச்சயம் பணம் பண்ணும் ரகசியத்தை எளிய மக்களும் புரிந்து பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை விவரிக்கும் நூல்.