எஸ் கிருஷ்ணன் Combo Books

Save 15%

Author: எஸ். கிருஷ்ணன்

Pages: 1500

Year: 2025

Price:
Sale priceRs. 1,890.00 Regular priceRs. 2,233.00

Description

தமிழகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையை உடைய நகரம் மதுரை. பாண்டியர்களின் தலைநகராக சங்க காலம் தொட்டு திகழ்ந்து வந்த மதுரை, களப்பிரர்களாலும் இடைக்காலப் பாண்டியர்களாலும் சோழர்களாலும் விஜநயகரப் பேரரசாலும் ஆளப்பட்ட பிறகு, சுமார் இரு நூற்றாண்டுகள் மதுரை நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்நூல் அந்த இரு நூற்றாண்டுகளின் வரலாறு. நாயக்கர்கள் யார்? அவர்களுடைய பூர்விகம் என்ன? இவர்களுடைய வம்சத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் யார், யார்? நடத்திய போர்கள் என்னென்ன? கலை, பண்பாடு, கட்டுமானம், இலக்கியம் ஆகிய துறைகளில் எத்தகைய பங்களிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்? ஆட்சி எப்படி இருந்தது? மதுரையின் வரலாற்றை இவர்கள் எப்படி மாற்றியமைத்தார்கள்? தமிழக வரலாற்றில் இவர்களுடைய இடம் என்ன? ‘சேர, சோழ, பாண்டியர்கள்’, ‘விஜயநகரப் பேரரசு’, ‘குப்தப் பேரரசு’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து எஸ். கிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்நூல் வரலாற்றைச் சுவையாகவும் எளிமையாகவும் தரவுகளின் அடிப்படையில் சீராகவும் விவரிக்கிறது.

You may also like

Recently viewed