Ulaga Varalaru /உலக வரலாறு

Save 10%

Author: H.G. வெல்ஸ், ஜனனி ரமேஷ்

Pages: 416

Year: 2024

Price:
Sale priceRs. 450.00 Regular priceRs. 500.00

Description

உலக வரலாற்றை எளிமையாகவும் சுவாரசியமாகவும் கற்க விரும்புபவர்களின் தொடக்கப் புள்ளி இந்நூல். உலகளவில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய ஒரு முக்கியமான படைப்பு முதல் முறையாகத் தமிழில். பூமி தோன்றிய கணம் தொடங்கி முதல் உலகப் போர் நிறைவுற்ற பொழுது வரையிலான நிகழ்வுகளை இரு அட்டைகளுக்குள் அடக்குவது என்பது கற்பனையிலும் சாத்தியமில்லாத ஒரு செயல். சாத்தியமில்லாத அச்செயலை அசாதாரணமான முறையில் நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் ஏ.எ. வெல்ஸ். உயிர்கள் தோன்றி, வளர்ந்த கதை; பேரரசுகள் வாழ்ந்து, வீழ்ந்த கதை; பெரும் நகரங்கள் தோன்றி, மண்ணில் புதையுண்ட கதை; புத்தரும் இயேசு கிறிஸ்துவும் காந்தியும் பிற தலைவர்களும் தோன்றிய கதை; இந்து மதமும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் பிற சமயங்களும் தோன்றி நிலைபெற்ற கதை; பொற்காலங்களும் இருண்ட காலங்களும் தோன்றி, மறைந்த கதை; கலையும் இலக்கியமும் பண்பாடும் அறிவியலும் தத்துவமும் கட்டடக்கலையும் தோன்றி உலகை மாற்றிய கதை; காடுகளில் இருந்து நகரங்களும் நாடுகளும் தோன்றிய கதை. இது மனித சமூகத்தின் கதை. மனித நாகரிகத்தின் கதை. நம் பிரபஞ்சத்தின் கதை. நம் ஒவ்வொருவரின் கதை. ஒரே நூலில் அனைத்தையும் தெரிந்துகொண்டுவிடமுடியாதுதான். ஆனால் ஒரே நூலில் அனைத்தின்மீதும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது சாத்தியம். இந்நூல் ஓர் உதாரணம். மாணவர்கள் தொடங்கி அனைவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான படைப்பு.

You may also like

Recently viewed