Description
மதம் என்றும் மார்க்கம் என்றும் சொல்லப்படும் விஷயத்துக்கு பல வண்ணங்களுண்டு. பல சமயங்களில் அது வெறியூட்டியுள்ளது. சில சமயங்களில் அது நெறியூட்டியுள்ளது. ஆனால் அதற்கெல்லாம் காரணம் மதத்தின் உள்ளே உள்ள கருத்தல்ல. மதத்திற்கு வெளியே உள்ள புறக்காரணிகள்தான். மதங்களால் கலைகளும் வளர்ந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. நாம் எதை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் இங்கே முக்கியமானது. பலாச்சுளை சுவையானது. ஆனால் பலாப்பழத்தின் வெளிப்புறம் கடினமானது. அது குத்தும். அதைத் தாண்டித்தான் பலாச்சுளையை நாம் எடுக்க வேண்டியுள்ளது. மதங்களின் பின்னாலுள்ள வரலாறும் இப்படித்தான் உள்ளது. தேனீக்களின் கொட்டல்களையெல்லாம் மீறித்தான் தேனை எடுக்கவேண்டியுள்ளது. மதம் தரும் பாடம் என்கிற மலைத்தேனையும் நாம் கஷ்டப்பட்டுத்தான் எடுக்க வேண்டியுள்ளது. மார்க்கம் தரும் தேனை நீங்களும்
கொஞ்சம் சுவைத்துத்தான் பாருங்களேன்.