Description
வானில் நமக்குத் தெரியாத ஓர் இருள் பிரதேசத்தில் நம்மைப் போன்ற உயிர்கள் இருப்பதற்குச் சாத்தியம் உண்டா? சாத்தியமே இல்லை என்று உறுதியாக மறுக்கமுடியுமா? ஏன் முடியவில்லை?
பறக்கும் தட்டு, ஏலியன் குறித்து உலாவரும் கட்டுக்கதைகளை ஒதுக்கிவிடுவது சுலபம். ஹாலிவுட் கற்பனைகளை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்வதும் எளிதுதான். ஆனால் அறிவியலை நம்பும் சிலர் ஏலியன் குறித்த ஆய்வுகளில் முனைப்போடு இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? வானியல் துறையைச் சேர்ந்த சிலருமேகூட ஏலியன்களை முற்றாக மறுதலிக்காமல் இருப்பது குழப்பத்தை அல்லவா ஏற்படுத்துகிறது? தவிரவும், அமெரிக்க ராணுவமும் பிரான்ஸ் ராணுவமும் ஏலியன்களை அதிகாரபூர்வமாகத் தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுவதை எப்படிப் பார்ப்பது?
ஏலியன் உலகின் மர்மக் கதவுகளை அறிவியல் சாவி கொண்டு இந்நூல் திறந்து காட்டுகிறது. ரகு ராமனின் இந்நூலை வாசித்த பிறகு நீங்கள் பார்க்கும் வானம் பழைய வானமாக இருக்காது. உங்கள் வாழ்க்கை பழைய வாழ்க்கையாக இருக்காது. பிரபஞ்சம் குறித்த உங்கள் பார்வையும் வேறொன்றாக மாறியிருக்கும்.
ஒரு துப்பறியும் நாவல்போல் எழுதப்பட்டிருக்கும் ஆச்சயரியமூட்டும் அறிவியல் நூல்.