Description
ஒன்றுபோலதான் இருக்கும் எல்லா பல்புகளும். சில அதிக வெளிச்சத்தைத் தரும். சில மங்கலாக எரியும். இந்த மாற்றத்துக்குக் காரணம் வாட்ஸ் அளவு. அதைப்போல மனிதர்களும் சில நேரங்களில் மிகப் பிரகாசமாகவும் வேறு சில நேரங்களில் சோர்வாகவும் இருக்கிறார்கள். காரணம் தெளிவின்மை. இது மட்டும் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் என் வாழ்க்கை மாறியிருக்கும். நான் பள்ளி மாணவனாக இருந்தபோது எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தால் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றெல்லாம் சிலர் வருந்துவது உண்டு.
வருத்தத்தையும் ஆதங்கத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு இந்தப் புத்தகத்தை முதலில் அள்ளிக்கொள்ளுங்கள். வாழ்க்கை குறித்த புரிதலை அதிகப்படுத்தும், மனதை லேசாக்கும், ஊக்கப்படுத்தும் பல்வேறு கோணங்களையும் வழிமுறைகளையும் தக்க உதாரணங்களோடு எளிமையாக விளக்குகிறது இந்நூல். தடையேதுமில்லை, உஷார் உள்ளே பார், மனதோடு ஒரு சிட்டிங், மேன்மை கொள், உயர உயர, சிக்ஸர், சொல்லாததையும் செய், உச்சம் தொடு, நல்லதாக நாலு வார்த்தை, சின்ன தூண்டில் பெரிய மீன், உடல் மனம் புத்தி உள்ளிட்ட நூல்களின் வரிசையில் இடம்பெறும் சோம. வள்ளியப்பனின் அடுத்த முக்கியமான நூல் இது.
இலக்கு, வழிமுறைகள், முயற்சி, வெற்றி, வாழ்க்கை எனப் பலவற்றையும் எளிதில் புரிந்துகொள்ள உதவும் புதிய நூல்.