Description
தங்கப் புத்தகம் என்று தயங்காமல் இந்நூலை அழைக்கலாம். தங்க நகை வணிகம் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அனைத்தும் இதில் அடங்கியிருக்கின்றன என்பதால் மட்டுமல்ல. வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்வதுதான் உங்கள் கனவு என்றால் அந்தக் கனவை நனவாக்க உதவும் பல பாடங்கள் தங்கக்-கட்டிகள்போல் இதில் ஒளிந்துகொண்டிருக்கின்றன. இது ஓர் உத்வேகமூட்டும் சாதனை வரலாறு. * கார்ப்பரேட் நிறுவனங்களின் வரலாறு நம் நாட்டில் குறைவாகவே எழுதப்படுகின்றன. இந்நூல் அக்குறையைப் போக்குவதோடு ஒரு வைரம்போல் ஜொலிக்கிறது. திரு. ஜோய் மனிதத்தன்மையோடும் நேர்மையோடும் அடைந்திருக்கும் வெற்றி அசாத்தியமானது. சொல்லப்படவேண்டியது. - நல்லி குப்புசாமி செட்டியார், நிறுவனர், Nalli ‘ஜோயாலுக்காஸ்’ என்பது இன்று அனைவரும் அறிந்த பெயராகும். போட்டி மிகுந்த துறையில் இந்தப் பன்னாட்டு நிறுவனத்தை திரு. ஜோய் எவ்வாறு கட்டமைத்தார் என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அவரது வாழ்க்கை, ஆர்வமுள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் ஓர் உந்துதலாக இருக்கும். - ஸ்ரீதர் வேம்பு, தலைமை விஞ்ஞானி, Zoho Corporation 11 நாடுகளில் ஜோயாலுக்காஸ் நிறுவனத்தை நிலை நிறுத்தியிருப்பதில் திரு. ஜோய் பெற்றிருக்கும் வெற்றி அவருடைய தலைமைப் பண்பினால் சாதித்திருக்கும் மகத்தான சாதனையே. - நிகில் காமத், துணை நிறுவனர், Zerodha பிராண்ட் உருவாக்கம், விடாமுயற்சி, ஒருமுகப்பட்ட சிந்தனையுடன் இலட்சியத்தை அடைந்துகாட்டுவது என விலைமதிப்பிடமுடியாத உள்ளொளிகளைத் தருகிறது திரு ஜாய் ஆலுக்காஸின் சுயசரிதை. - எல்.வி.நவநீத், தலைமைச் செயல் அதிகாரி, The Hindu Group,