Description
பங்குச்சந்தை, உணர்வு மேலாண்மை, நிர்வாகம் போன்றவை குறித்து நான் எழுதுவது பலருக்குத் தெரியும். இதுவரை நான் எழுதிய மூன்று சிறுகதை தொகுப்புகள் வந்திருப்பதும், அதில் ஜெமினி சர்க்கிள் தொகுப்பிற்கு கம்பம் பாரதி கலை இலக்கியப் பேரவையின் முதல் பரிசு கிடைத்திருப்பதும் பலருக்கும் தெரியாது.
திட்டம் 6 நான் எழுதுகிற முதல் நாவல். தனது அணிந்துரையில் திரு பாவண்ணன் திட்டம் 6 நாவல் குறித்து எழுதியிருப்பது,
"மனித குலம் எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான ஒரு நெருக்கடி சார்ந்த சிந்தனைகளை வெவ்வேறு கோணங்களில் இருந்து முன்வைத்தபடி நகர்கிறது நாவல்..."
"சோம வள்ளியப்பன் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிற வடிவ புதுமையே நாவலுக்கு ஒரு வசீகரத்தை கொடுக்கிறது..."
நாவலுக்கு அணிந்துரை கொடுத்த திரு சு வேணுகோபால் அவரது அணிந்துரையில் சொல்வது,
"திகைப்பை ஏற்படுத்தும் அறிவியல் யுகத்தின் முக்கியமான ஒரு சந்திப்பில் நின்று பேசுகிறது நாவல்...."
" ஹாலிவுட் திரைப்படங்கள் எடுப்பதற்கு முன் ஆய்வுக் கருத்துக்களைத் திரட்டி, விவாதிப்பது போன்ற பாணியில் கருத்துக்கள் அலசப்படுகின்றன. ..."

