அறிவியல் திரித்தல்கள்

Save 4%

Author: ரவி நடராஜன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 220.00 Regular priceRs. 230.00

Description

'அறிவியல் நூற்றாண்டு' என்று அழைக்கப்படும் 20-ம் நூற்றாண்டில், உலகெங்கும் மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாகி, மனிதச் சமூகம் மிகப் பெரும் பயனடைந்தது. ஆனால் இதே நூற்றாண்டில் தொழிற்புரட்சியின் விளைவால் உருவான பெரு நிறுவனங்கள் தங்களது நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மனித சமூகத்திற்குப் பயன்படக்கூடிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீது தங்கள் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. இந்த நிறுவனங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்கள் வசதிக்கேற்ப எப்படியெல்லாம் திரித்தன என்பதை இந்தப் புத்தகம் விவரிக்கிறது. பலதரப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, சிறுக சிறுகத் தகவல்களைத் திரட்டி, ஆகச் சிறந்த முறையில் இந்நூலை எழுதியுள்ளார் ரவி நடராஜன், அமில மழைப் பிரச்சினை, ராட்சச எண்ணெய்க் கசிவுகள், ஓசோன் அடுக்கில் ஓட்டை, ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி, டால்கம் பவுடர் உற்பத்தி, செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள், சிகரெட் உள்ளிட்ட பல்வேறு ஆழமான அறிவியல் கருத்துகளை ஆராய்ந்து தொகுத்துத் தருகிறது இந்த நூல், சக மனிதன் மீதான அக்கறையும், அறிவியல் மீதான தீராத நாட்டமும் பின்னிப் பிணைந்து ஊடாடும் இப்புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

You may also like

Recently viewed