Description
அரசியலும் திரையுலகமும் பிரிக்க முடியாதவை. தமிழ்நாட்டில் அந்தக் காலத்திலேயே பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் தடம் பற்றித் தற்காலத்திலும் பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியலோடு அதன் தொடக்கக் காலம் தொட்டே இருந்து வரும் திரையுலகத் தொடர்பு குறித்தும், இன்றைய திரைப் பிரபலங்களின் அரசியல் பங்களிப்பு குறித்தும் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார் ஆசிரியர் ஆர்.ராதாகிருஷ்ணன்.
தமிழக அரசியலோடு நின்றுவிடாமல் என்.டி.ஆர், சிரஞ்சீவி. பவன் கல்யாண், விஜயசாந்தி, பிரேம் நசீர், ராஜ்குமார் என தென்னிந்தியா முழுவதிலும் அரசியலோடு தொடர்புடைய பல நடிகர்களின் அரசியல் வாழ்வு குறித்து அலசும் தனித்துவமான நூல்.