பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்

Save 6%

Author: சே.சுசீந்தரன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 150.00 Regular priceRs. 160.00

Description

கணிதமே அனைத்திற்கும் அடிப்படை. நாட்டு வரைபடங்கள், உடைகள், வியாபாரப் பரிவர்த்தனைகள், அன்றாடச் செலவுகள் எனக் கணிதத்தின் உதவி இல்லாமல் நம்மால் இதுபோன்ற எந்தப் பணியையும் சீராகச் செய்யமுடியாது. இந்தக் கணிதத்தில் இந்தியர்கள், குறிப்பாகப் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கியுள்ளனர். எந்தவித உபகரணங்களும் இல்லாமல், கை விரல்களாலும் மனத்தாலும் நினைவாற்றலாலும் அவர்கள் வியாபாரம், வரவு செலவு, கட்டட அளவைகள், நீர் அளவைகள் எனப் பலவற்றிலும் சிறப்பான முறையில் செயல்பட்டார்கள். அவ்விதக் கணக்குகளை மீட்டெடுத்து நமது தலைசிறந்த பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வருவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம் பழந்தமிழர் பயன்படுத்திய கணக்கீட்டு முறைகள், அளவைகள், வாய்பாடுகள், நெல் அளவை, நீர் அளவை, நில அளவை, வட்டம், சதுரம், நீளம் என அவர்கள் பயன்படுத்திய அளவைகள் மற்றும் கணக்கீட்டு முறைகளை இந்தப் புத்தகம் மறு அறிமுகம் செய்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அவர்களது அளவை முறைகள் இந்தத் தொழில்நுட்பக் காலத்திலும் எத்தனை எளிதாகப் புரியும் வகையில் உள்ளது என்பதுதான்.

You may also like

Recently viewed