Description
டிஜிட்டல்மயமான இன்றைய காலத்திலும் கூட பலருக்கும் முதலீடுகள் செய்யும் வழிகள் பற்றிய புரிதல்கள் இல்லை. பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பங்குச் சந்தைப் போக்குகள் குறித்த விளம்பரங்களைத் தாண்டிய உண்மை நிலவரம் என்ன போன்றவற்றிலும் புரிதல் இல்லை. இவற்றில் எல்லாம் ஆழம் தெரியாமல் காலைவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். விவரம் அறிந்தவர்களே இவற்றில் எல்லாம் விழுந்துவிடுகிறார்கள் என்பதுதான் சோகம்.
சோம. வள்ளியப்பனின் ‘முதலீடுகள்’ எனும் இந்நூலில் சொத்துகள், கிரிப்டோ கரன்சிகளில் முதலீடுகள், ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரம், மாநில அரசின் பாண்டுகள் வரையுள்ள பல்வேறு முதலீடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு ஆலோசனைகளும் நிறைந்த இந்நூல் முதலீடு செய்பவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி நூல் என்பதில் ஐயமில்லை.

