Description
கற்பனையை விஞ்சும் ஆற்றல் உண்மைக்கு மட்டுமே உண்டு. அந்த உண்மையை உளப்பூர்வமாகக் காட்சிப்படுத்தும் இந்நாவல் ஜீவத் துடிதுடிப்போடு மின்னுகிறது. ஓர் உன்னதமான குறிக்கோளை அடைவதற்காகப் போராடும் ஒரு தலித் இளைஞனின் கதையாகத் தொடங்கி ஒரு காலகட்டத்தின் கூட்டு வாழ்வியலாக விரிந்து படர்கிறது இந்நாவல். மானுட நேசம் மலரும் அதே நிலத்தில்தான் பிளவும் வெடிக்கிறது. காதலைக் கொண்டாடும் அதே மானுடம்தான் இருதயத்தைப் பிளக்கும் சாதிக் கலவரங்களையும் தோற்றுவிக்கிறது. சேரியும் பெருநகரமும், வண்ணமும் இருளும், நேசமும் நஞ்சும், கனவும் சிதிலமும், இன்பமும் வலியும் ஒன்று கலக்கின்றன. ஒரு சமூகப் போராளியாகவும் மனித உரிமை ஆர்வலராகவும் நாம் அறிந்திருக்கும் எவிடென்ஸ் கதிரின் இந்நாவல் அவரை ஒரு நுண்ணுணர்வுமிக்க இலக்கியவாதியாக முதல்முறையாக வெளிப்படுத்துகிறது. உங்கள் உள்ளத்தை உலுக்கியெடுத்து, உங்களை ஆத்மார்த்தமாக அணைத்துக்கொள்ளும் உன்னதமான பெரும்படைப்பு இது.


