Description
இப்படியொரு பதைபதைக்கச் செய்யும் வாக்குமூலத்தை இதற்கு முன்பு நீங்கள் வாசித்திருக்க மாட்டீர்கள். உங்கள் உள்ளத்தை உலுக்கி எடுக்கக்கூடிய ஆற்றலையும் உங்கள் நினைவுகளோடு நிரந்தரமாகத் தங்கிவிடக்கூடிய அசாதாரணத் திறனையும் கொண்டிருக்கும் முக்கியமான பதிவு இது.
தூக்கு தண்டனைக் கைதியாக இருந்து மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டு, தற்சமயம் வாழ்நாள் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் செல்வம் தனது நீண்டகால சிறை வாழ்வை ஒளிவு மறைவின்றிப் பதிவு செய்திருக்கிறார். கைதிகளின் இருள் உலகை மட்டுமல்ல காவல் துறையினர், சிறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், குடும்பத்தினர் என்று நூலாசிரியர் காட்சிப்படுத்தும் மனிதர்கள் அனைவரும் நாம் அவர்களைப்பற்றிக் கொண்டிருக்கும் பிம்பங்கள் அனைத்தையும் தகர்த்தெறிகிறார்கள்.
திருடர்கள் தொடங்கி கொலைகாரர்கள்வரை; சாமியார் தொடங்கி சிலைக் கடத்தல்காரர்வரை; விடுதலைப் புலிகள் தொடங்கி அரசியல் கைதிகள்வரை சக கைதிகள் குறித்து செல்வம் தீட்டியுள்ள எண்ணற்ற சித்திரங்கள் திகைப்பில் ஆழ்த்துகின்றன. கடந்த ஐம்பதாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமும் அதே காலகட்டத்தின் குற்றச் சரித்திரமும் ஒருசேர இந்நூலில் கிடைக்கின்றன.
சிறை குறித்து சமூகம் கொண்டிருக்கும் பார்வைகள் புதிதல்ல. சமூகம் குறித்து சிறையிலிருக்கும் ஒரு கைதி எழுதியிருக்கும் முதல் விரிவான நூல் இதுவே.

