Author: கலைஞர் மு.கருணாநிதி

Pages: 608

Year: 2024

Price:
Sale priceRs. 450.00 Regular priceRs. 500.00

Description

அண்ணன்மார் சுவாமி என்று போற்றப்படும் பொன்னர் (பெரிய அண்ணன் என்றும் அழைக்கப்படுபவர்) மற்றும் சங்கர் (சின்ன அண்ணன் என்றும் அழைக்கப்படுபவர்) ஆகிய இரு சகோதரர்களின் வாழ்க்கை நாட்டுப்புற பாரம்பரியத்தில் ஆழமாகப் பதிந்த கதையாகும். பொன்னர் மற்றும் சங்கர் ஆகியோரின் கதை, வாய்வழியாகக் கடத்தப்பட்ட கதைகள் மூலம் உயிர்வாழ்வது மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் பல்வேறு இலக்கியப் படைப்புகள், நாடகங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் அழியாமல் உள்ளது. இந்த காவியத்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் தன் பேனாவால் ஓவியமாக்கினார். ஆகவே அது வெகுமக்கள் காவியமாக மாறியது! எண்பதுகளின் தொடக்கத்தில் (17-07-87) குங்குமம் இதழில் கலைஞரின் கைவண்ணத்தில் தொடர்கதையாக வாராவாரம் வந்து (62 வாரம்) கலைஞர் ரசிகர்களால் சிறப்பாக பேசப்பட்ட தொடர்கதை இந்த பொன்னர் சங்கர். தொடர்கதைக்கு கோட்டோவியங்கள் வரைந்தவர் கோபுலு. முதல் வாரம் கலைஞர் கருணாநிதி அவர்கள் பொன்னர் சங்கர் பற்றி ஒரு முன்னுரையை எழுதி இருப்பார். மொத்தம் எட்டு பக்கங்களுக்கு வந்த அந்த முன்னுரை ஒரு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல. இரண்டாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து அறுவது வாரங்கள் கதை விறுவிறுப்பாக சென்றது. கதை முடிந்த பின்னர் ஒரு முடிவுரையை எழுதி சில விளக்கங்களையும் அளித்தார் கருணாநிதி. ஆக மொத்தம் அறுபத்தி இரண்டு வாரங்கள் வந்த இந்த பொன்னர் சங்கர் தொடர் சிறந்த வரவேற்பை பெற்றது. பிறகு பல்வேறு பதிப்பகங்களின் வாயிலாக நூலாக்கம் பெற்று மக்களிடைய தொடர் வரவேற்பை இன்றும் பெற்றுவருது! அந்த கன்னி முயற்சியில் எமது ஸ்ரீ பாரதி பதிப்பகமும் இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறது!

You may also like

Recently viewed