தலைவா:ஒரு விரல் புரட்சி / Thalaiva : Oru Viral Puratchi

Save 8%

Author: இம்மானுவேல் நெடுஞ்செழியன்

Pages: 144

Year: 2026

Price:
Sale priceRs. 170.00 Regular priceRs. 185.00

Description

வரலாறு காணாத வெற்றி என்பது உண்மையிலேயே இதுதான். திரைத் துறையைச் சேர்ந்த ஒருவர் முதல்வராவது இது முதல் முறையல்ல என்றாலும் கட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகள்கூட நிறைவடையாத நிலையில், இத்தனை பெரிய வெற்றியைத் தமிழக மக்கள் விஜய்க்கு அளித்திருக்கிறார்கள்.

அமைதிப் புரட்சி என்று மட்டுமே இதனை அழைக்கமுடியும். திமுக அல்லது அதிமுக; இந்த இரண்டையும் தவிர்த்து இன்னொரு கட்சியால் ஆட்சியமைக்க அல்ல, அப்படியொரு கனவைக்கூடக் காண முடியாது என்னும் நிலையில் விஜய் முதல்வராகியிருக்கிறார். எல்லாக் கணிப்புகளையும் எல்லாத் தேர்தல் கணக்குகளையும் விஜய் ஒற்றைச் சக்தியாக நிமிர்ந்து நின்று முறியடித்திருக்கிறார். எண்ணற்ற எதிர்ப்புகளையும் எண்ணற்றோரின் ஏளனங்களையும் தவிடுபொடியாக்கி இருக்கிறார். மேட்டிமைத்தனத்தோடு தன்னை நிராகரித்த அனைவரையும் வாயடைக்க வைத்திருக்கிறார். தோற்க வேண்டும் என்று துடித்தவர்களால் மட்டுமல்ல. விஜய் வெற்றி பெறவேண்டும் என்று கனவு கண்டவர்களால்கூடப் புரிந்தகொள்ள முடியாத இமாலய வெற்றி இது.

இது எதிர்பாராமல் நிகழ்ந்த மேஜிக்கா அல்லது கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வா? இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது? குழுந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என்று அனைவரின் அன்பையும் ஆதரவையும் முதல்வர் விஜய் பெற்றிருப்பது எப்படி? தமிழக வெற்றிக் கழகம் எந்த வகையில் திராவிடக் கட்சிகளிடமிருந்து வேறுபடுகிறது? தமிழகத்தின் தலையெழுத்தை விஜய் எவ்வாறு திருத்தியமைப்பார்?

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலகச் சாதனைகள், அரசியல் நுழைவு, முதல்வர் பணி அனைத்தையும் விரிவாக விவரிக்கிறது இந்நூல்

விஜய் என்னும் மந்திரச் சக்தியை நெருங்கிச் செல்லவும் விளங்கிக் கொள்ளவும் உதவும் முக்கியமான நூலும்கூட!

You may also like

Recently viewed