{"product_id":"9789347936081_","title":"சீரியல் கில்லர்ஸ் \/ Serial Killers","description":"\u003cdiv\u003e\n\u003cp\u003eதொடர் கொலையாளிகள் பற்றிய திரைப்படங்களும் புனைவுகளும் நமக்குள் ஏற்படுத்தும் அச்சம், நிஜத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அறியும்போது இன்னும் கூர்மையாகிறது. ஒரே ஒரு கொலைக்கும். தொடர்ச்சியான கொலைகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஒருவன் எப்படித் தொடர் கொலையாளியாக மாறுகிறான்? அவனது மனநிலையையும் செயல்பாடுகளையும் உருவாக்குவதில் குடும்பம் சமூகம், சூழல், அதிகாரம் ஆகியவற்றின் பங்கு என்ன?\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் குற்றங்கள். வழக்குகள் மற்றும் அவற்றின் பின்னணிகளை ஆராயும் இந்நூல், தொடர் கொலையாளிகளை வெறும் குற்றவாளிகளாகப் பார்க்காமல், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் இயங்கும் மனவியல், சமூகக் காரணிகள் மற்றும் குற்றத்தின் இயங்குமுறை ஆகியவற்றை ஆராய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eடெட் பண்டி முதல் ஜெஃப்ரி டாஹ்மர் வரை,சார்லஸ் சோப்ராஜ் முதல் ஆட்டோ சங்கர், சயனைடு மல்லிகா வரை பல்வேறு நாடுகளையும் காலகட்டங்களையும் சேர்ந்த தொடர் கொலையாளிகளின் வாழ்க்கை, குற்றங்கள் மற்றும் வழக்குகள் வழியாக, மனித மனத்தின் இருண்ட பக்கத்தை இந்த நூல் ஆராய்கிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது வெறும் குற்றக் கதைகளின் தொகுப்பு அல்ல; ஒரு மனிதன் எவ்வாறு கொலையாளியாக மாறுகிறான் என்ற கேள்விக்கான தேடல்.\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"கிழக்கு பதிப்பகம்","offers":[{"title":"Default Title","offer_id":54830047658267,"sku":null,"price":190.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0815\/1492\/2267\/files\/SerialKiller.jpg?v=1795601968","url":"https:\/\/dialforbooks.in\/products\/9789347936081_","provider":"Dialforbooks","version":"1.0","type":"link"}